Published Date: August 23, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை மாநகராட்சி மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சி மத்திய மண்டல வார்டு 77 சுப்ரமணியபுரம் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதே போல் மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மத்திய மண்டலம் வார்டு 77 சுண்ணாம்பு காளவாசல், காஜா 1முதல் 6 குறுக்குத் தெருகளில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை, காஜா 3வது குறுக்குத் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மழை நீர் வடிகால் பணிகள் என மொத்தம் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் .
இந்த நிகழ்வில் மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலி தளபதி, மகேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர் .
Media: Dinakaran